மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை கூட்டத்தில் நேற்று, காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்டுமான விவாதத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது என அரசு சார்பில் முதல்வர் ரங்கசாமி தீர்மானம் கொண்டு வந்தார். இதில் அவர் பேசுகையில், மேகதாதுவில் கர்நாடக அரசு புதிதாக அணை கட்டினால், காரைக்கால் டெல்டா பகுதிக்கு கிடைக்க வேண்டிய 7 டி.எம்.சி நீர் கிடைக்க பெறாமல் போகும் என்றார். அனைத்து கட்சியினரும் ஆதரித்து பேசினர். இறுதியாக சபாநாயகர் செல்வம், இந்த தீர்மானத்தை குரல் வாக்கெடுப்புக்கு விடுத்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.

Related Stories:

More
>