×

சோலையாறு வெள்ளத்தில் மூழ்கி சென்னையை சேர்ந்த மருத்துவ மாணவர் பலி

வால்பாறை:  சென்னை மேற்கு மாம்பலம், குப்பையா தெரு, மௌலி அப்பார்ட்மெண்ட்டை சேர்ந்தவர் ராம்(25). இவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை ராம், நண்பர்கள் 3 பேருடன்
வால்பாறைக்கு சுற்றுலா சென்றார். சோலையார் அணை

கரையோரம் உள்ள ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்பகுதியினர் தடை செய்யப்பட்ட பகுதி என்று எச்சரித்தும் கேட்கவில்லை.  அணையில் இருந்து ஆற்றில் விநாடிக்கு 2000 கன அடி வீதம் வந்த வெள்ளத்தில் திடீரென ீராம்  அடித்துச்செல்லப்பட்டார். நண்பர்களால் அவரை மீட்க முடியவில்லை. அவரது உடலை தேடும் பணி நடக்கிறது.


Tags : Chennai ,Cholayaru , Solayaru, medical student, killed
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?