பாரா ஒலிம்பிக் தொடரில் பதக்கம் பெற்ற இந்திய வீரர்களுக்கு கட்சி தலைவர்கள் பாராட்டு

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: டோக்கியோ பாரா ஒலிம்பிக் தொடரில் மகளிர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனை அவனி லெகரா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருப்பது வரலாற்று சிறப்பு மிக்கது. வட்டு எறிதலில் இந்தியாவின் யோகேஷ் கதுனியா 44.38 மீட்டர் தூரத்திற்கு வட்டெறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றிருப்பதும் பாராட்டுக்குரியது. மேலும் ஈட்டி எறிதலில் தேவேந்திரா ஜஜாரியா வெள்ளிப்பதக்கமும், சுந்தர் சிங் குர்ஜார் வெண்கலப்பதக்கமும் வென்றிருப்பது விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களுக்கு உந்துதலாக உள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸ்: பாரா ஒலிம்பிக் போட்டிகளில் ஒரே நாளில் இந்தியா 5 பதக்கங்களை வென்றது இதுவே முதல்முறை. இந்தியா அதிக பதக்கங்களை வென்றிருப்பதும் இந்தப் போட்டியில் தான். இந்தியா பெருமை கொள்வதற்கு காரணமான சாதனையாளர்களுக்கு பாராட்டுகள்.

Related Stories:

More
>