6 முதல் 8ம் வகுப்பு வரை கர்நாடகாவில் பள்ளிகள் திறக்க முடிவு

பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த ஜூன் மாதம் கொரோனா தொற்று குறைந்ததையடுத்து  முதற்கட்டமாக கல்லூரிகள் திறக்க மாநில அரசு அனுமதி அளித்தது. அடுத்த  கட்டமாக பள்ளிகள் திறக்க மாநில அரசு முடிவு செய்து வந்தது. அதன்படி கடந்த 23ம் தேதி  9ம் வகுப்பு முதல் இரண்டாம் நிலை கல்லூரிகள் வரை திறக்க அனுமதி  அளிக்கப்பட்டது. ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை திறக்க  அனுமதி வழங்குவது குறித்து பின்னர் ஆலோசனை நடத்தி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பான ஆலோசனை கூட்டம் பெங்களூரு  விதான சவுதாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் செப்டம்பர் 6ம் தேதி முதல், 6ம்  வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையுள்ள பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது.  பள்ளிகளில் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories:

>