ஏராளமானோர் மாயம்: உத்தரகாண்டில் வெள்ளம் 5 குழந்தைகள் சடலம் மீட்பு

பிதோராகர்க்: உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பலியாகினர். ஏராளாமானோர் காணாமல் போயுள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிதோராகர்க் மாவட்டத்தில் உள்ள ஜூம்மா கிராமத்தில் நேற்று ஏற்பட்ட வெள்ளத்தில் 3 வீடுகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. அப்போது வீட்டில் இருந்தவர்களும் அடித்து செல்லப்பட்டனர். காணாமல் போன அவர்களை தேடும்பணி முடுக்கி விடப்பட்டது. இதில் 3 குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்டன.

அதன் பின்னர், மேலும் 2 சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதனால் பலியானோரின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்தது. ஏராளமானோர் காணாமல் போயுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. இது குறித்து பிதோராகர்க் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சவுகான் கூறுகையில், ``வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தேசிய, மாநில  பேரிடர் குழுக்களும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழுக்களும் அனுப்பப்பட்டுள்ளது,’’ என்று தெரிவித்தார்.

Related Stories:

>