டோக்கியோ பாராலிம்பிக்ஸ் வட்டு எறிதலில் வினோத்குமார் வெற்றி செல்லாது: பதக்கத்தை திரும்பப்பெற்று ஒலிம்பிக் கமிட்டி நடவடிக்கை..!

டோக்கியோ: டோக்கியோ பாராலிம்பிக் வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் வினோத்குமார் பெற்ற பதக்கம் திரும்ப பெறப்பட்டது. பாராஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் 9 விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளனர். இதில் எல்லை பாதுகாப்பு படை வீரரான வினோத் 19.91 மீட்டர் தொலைவுக்கு வட்டு எறிந்து 3வது இடம் பிடித்தார். இந்த போட்டியில் போலந்து வீரர் கோசெவிக்ஸ் (20.02 மீ.) தங்கப் பதக்கமும், குரோஷியாவின் வெளிமிர் சாண்டோர் (19.98 மீ.) வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

பிஎஸ்எப் வீரராக சேர்ந்து லே மலைப்பகுதியில் பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, தவறி விழுந்ததில் கால்களில் பலத்த காயமடைந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் படுத்த படுக்கையாக இருந்த வினோத் குமார் பாரா ஒலிம்பிக்சில் பங்கேற்று சாதித்திருந்தார். F52 பிரிவில் அவர் இந்தப் பதக்கத்தை வென்றார். ஆனால் தற்போது தொழில்நுட்பக் குழுவினர் எடுத்த முடிவின் அடிப்படையில் வினோத்குமாரின் பதக்கம் திரும்பப் பெறப்பட்டது. வட்டு எறிதல் எஃப் 52 பிரிவில் பங்கேற்க வினோத்குமார் தகுதியற்றவர் என தொழில்நுட்பக்குழு அறிவித்திருக்கிறது.

இதனால் துரதிர்ஷடவசமாக இந்தியாவின் பதக்க எண்ணிக்கை ஒன்று குறைந்திருப்பது சிறிது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

More
>