மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு மற்றும் குடிநீர் பாதுகாப்பு வாரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு மற்றும் குடிநீர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு நான்கு பிரசார வாகனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு மற்றும் குடிநீர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை சென்னை திருவல்லிக்கேணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,  அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில், மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நான்கு பிரசார வாகனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடி அசைத்து துவக்கி வைத்தார். பருவமழை காலங்களில் மழைநீரை வீணாக்காமல் சேகரிக்கும் வகையில் இந்த திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள வீடுகளில் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம், குடிநீரை வீணாக்காமல் சேகரிப்பது ஆகியவை குறித்தும் இந்த பிரசார வாகனங்கள் மூலம் மக்களுக்கு எடுத்துரைக்கப்பட உள்ளது.

மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் வீடுகள் தோறும் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் மற்றும் குடிநீர் பாதுகாப்பு வாரம் குறித்தும் எடுத்துரைக்கப்பட உள்ளது.

Related Stories:

>