விதியை மீறி கைது நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு..!!

சென்னை: விதியை மீறி கைது நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தாராபுரத்தில் தண்டபாணி என்பவரது ஊழியருடன் ஏற்பட்ட தகராறில் மாற்றுத்திறனாளி முருகானந்தம் கைது செய்யப்பட்டார். முருகானந்தத்தை கைது செய்த போலீஸ், அவரை தாக்கி ஆபாசமாக திட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மனித உரிமை மீறலில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

More
>