×

மாற்றுத்திறனாளி, ஆதரவற்றோர் உள்ளிட்டோருக்கு ரூ.7.76 லட்சத்தில் நலத்திட்ட உதவி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்

சென்னை: சைதாப்பேட்டை தொகுதியில் வருவாய்த்துறை சார்பில் மக்கள் குறைதீர் முகாம், சைதாப்பேட்டை மாந்தோப்பில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. இதில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றவர்கள், முதியவர்கள் மற்றும் விதவைகள்  ஆகியோருக்கு ₹7.76 லட்சம் மதிப்பில் அரசின் உதவித் தொகைகள், நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் விஜயா ராணி, கிண்டி, மாம்பலம் மற்றும் வேளச்சேரி ஆகிய பகுதி வட்டாட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றவர்கள், முதியவர்கள் மற்றும் விதவைகள் ஆகியோருக்கு 7 லட்சத்து 76 ஆயிரத்து 209 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஓய்வூதிய ஆதரவற்றோர்களுக்கு உதவித்தொகை வழங்குவதில் கடந்த ஆட்சி பல்வேறு விதிமுறைகளை பிறப்பித்ததால் 7.5 லட்சம் பேர் அதனால் பாதிப்படைந்தனர். தற்போது அவர்களுக்கு மீண்டும் உதவித்தொகை வழங்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. தமிழகத்தில் பல்வேறு வகையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கொடைக்கானல் நகராட்சி 100% தடுப்பூசி செலுத்தி உள்ளது. பழனியில் ஓரிரு நாட்களில் 100% தடுப்பூசி செலுத்தப்படும். தமிழகத்தில் சுற்றுலா தலங்களாக உள்ள திருவண்ணாமலை, நாகூர், வேளாங்கண்ணி போன்ற இடங்களில் 100% தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. செப்டம்பர 1ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்க உள்ளதால், ஆசிரியர்கள் முதல் தவணை செலுத்தி இருந்தாலே பணிக்கு வரலாம். ஆனால் அதுமட்டும் போதுமானது இல்லை கட்டாயம் 2வது தவணை தடுப்பூசியும் போட்டுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Minister ,Ma. Subramanian , physically disabe, seiwing machine, machine
× RELATED உடல் பருமன் சிகிச்சையில் இளைஞர்...