பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் குழந்தைகளுக்கான கொரோனா வார்டு: தெற்கு ரயில்வே பொது மேலாளர் திறந்து வைத்தார்

சென்னை: கொரோனா 3வது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தெற்கு ரயில்வேக்குட்பட்ட பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் குழந்தைகளுக்கான கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வார்டை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் திறந்து வைத்து, பார்வையிட்டார்.60 படுக்கைகள், 8 ஐ.சி.யூ படுக்கைகள் மற்றும் சிகிச்சை அளிப்பதற்கு தேவையான நவீன மருத்துவ உபகரணங்கள் இந்த வார்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், குழந்தைகளின் அச்சத்தை போக்க சுவர்களில் கண்களை கவரும் வண்ண ஓவியங்கள், தொலைக்காட்சி, விளையாட்டு பொருட்கள் உள்பட குழந்தைகள் வீட்டில் இருப்பது போன்ற உணர்வை அளிக்கும் வகையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், குழந்தைகளின் தாய்மார்கள் தங்கும் வகையில் அவர்களுக்கென தனியாக கூடுதல் படுக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன. பின்னர், பழைய ரயில்வே மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் தொடங்கி வைத்தார். தொடர்ந்து கொரோனா காலக்கட்டத்தில் பணிபுரிந்து வரும் டாக்டர்கள், நர்சுகளை பாராட்டி அவர்களை ஊக்கப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ரயில்வே உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>