×

கடனை அடைக்க சாக்கடையில் இறங்கி வேலை மலேசியாவில் விஷ வாயு தாக்கி வேதாரண்யம் இன்ஜினியர் பலி

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோவில்பத்து பகுதியை சேர்ந்த விவசாயி நடராஜன்-பார்வதி தம்பதியின் மகன் கேசவன் (30). இன்ஜினியரிங் பட்டதாரியான இவர், கடந்த 2011ம் ஆண்டு சிங்கப்பூர் செல்வதற்காக நண்பர்களிடம் ₹4லட்சம் கடன் வாங்கி மதுரை அருப்புக்கோட்டையை சேர்ந்த ஒருவரிடம் கொடுத்து ஏமாற்றம் அடைந்தார். இதைத்தொடர்ந்து கடனை அடைப்பதற்காக கேசவன் கடந்த 2019ம் ஆண்டு மலேசியா சென்று அங்கு கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 21ம் தேதி மலேசியாவில் உள்ள சைபர் ஜெயா என்ற இடத்தில் சாக்கடை கழிவுநீர் வாய்க்காலில் இறங்கி 12 அடி ஆழத்தில் கேபிள் புதைக்க கேசவன் இறங்கியபோது விஷவாயு தாக்கி இறந்ததாக மலேசியாவிலிருந்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 அங்கிருந்து உடலை கொண்டுவர குடும்பத்தினர் கடந்த 10 நாட்களாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக கேசவனின் தம்பி மாதவன், நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜிடம் மனு அளித்துள்ளார்.
 இது குறித்து கேசவனின் தாய் பார்வதி கூறுகையில், எனது மகன் நண்பர்களிடம் வாங்கிய கடனை அடைப்பதற்காக மலேசியா சென்றான். 2 ஆண்டுகளாகியும் இன்னும் கடன் அடைந்த பாடில்லை.ஆனால் விஷவாயு தாக்கி இறந்து விட்டதாக சொல்கிறார்கள். ஒன்றிய, மாநில அரசுகள் எனது மகனின் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீருடன் தெரிவித்தார்.

Tags : Vedaranyam ,Malaysia , Debt, work down, in Malaysia, poison gas, engineer, kills
× RELATED வேதாரண்யத்தில் 3 நாட்களாக மக்களை...