பொள்ளாச்சியில்தான் இந்த அவலம் சிறுவனை கடத்தி பலாத்காரம் செய்த இளம்பெண் போக்சோவில் கைது

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் சிறுவனை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த இளம்பெண்ணை  முதல்முறையாக போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.  கோவை மாவட்டம், பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த 12ம் வகுப்பு படித்து வரும் 17 வயது சிறுவனுக்கும், பொள்ளாச்சி ேநதாஜி ரோட்டை சேர்ந்த யமுனா (19) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. யமுனா, பெட்ரோல் பங்கில் ஊழியராக பணியாற்றி வந்தார். அப்போது மொபட்டிற்கு பெட்ரோல் போட சென்ற போது அந்த சிறுவனுடன் அவர் பேசி பழகியுள்ளார். மேலும், இருவரும் செல்போன் எண் வாங்கி கொண்டு அடிக்கடி பேசி வந்துள்ளனர்.

இந்நிலையில் யமுனா, அந்த சிறுவனிடம் காதலிப்பதாக கூறியுள்ளார். அவரை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளதாகவும்  கூறப்படுகிறது. கடந்த 26ம் தேதி யமுனா, சிறுவனை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பழனிக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை கட்டாயப்படுத்தி தாலி கட்ட வைத்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின், கோவை செம்மேடு வந்த இவர்கள் கோயிலில் வழிபாடு செய்து ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கினர். அப்போது யமுனா, சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுவனின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ேகாப்பெருந்தேவி, யமுனாவிடம் விசாரணை நடத்தினார். இதில், சிறுவனை கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தல் செய்தது தெரியவந்தது. மேலும், சிறுவனுக்கு குடல் இறக்க நோய் பாதிப்பு இருந்துள்ளது. இதற்காக, சிகிச்சை பெற்று வந்த சிறுவன், திருமணம் செய்ய முன் வரவில்லை. ஆனால் யமுனா, அந்த சிறுவனை கட்டாயப்படுத்தி கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து. யமுனா மீது முதல்முறையாக  போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து அவரை போலீசார் கைது செய்தனர். சிறுவன் மீட்கப்பட்டு  பெற்றோர் வசம் ஒப்படைக்கப்பட்டார்.  சிறுவனை இளம்பெண் கடத்தி சென்று பலாத்காரம் செய்த சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

More
>