×

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி தலைவர்கள் வாழ்த்து

சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் இந்த மகிழ்ச்சியான தருணத்தில், தமிழக மக்களுக்கு அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தருணத்தில், நம் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக நாம் அனைவரும் ஸ்ரீகிருஷ்ணரின் போதனைகளை பின்பற்ற உறுதியேற்போம். இந்த பண்டிகை நம் நாட்டில் அமைதி, நல்லிணக்கம், செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்தை வழங்கட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதிமுக: அதிமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘உயிர்களைக் காத்து  உலகாளும் மகாவிஷ்ணு, ஸ்ரீகிருஷ்ணராக அவதாரம் எடுத்த திருநாளை  மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் இனிய ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி  நல்வாழ்த்துகள். இத்திருநாளில் அன்பும், அமைதியும், இனிமையும் எங்கும் பெருக வேண்டும் என்ற எங்களுடைய விருப்பத்தினைத் தெரிவித்து, அனைவருக்கும் உளங்கனிந்த ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி’ திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக்  கொள்கிறோம்’’ என கூறப்பட்டுள்ளது.

டிடிவி.தினகரன்: ‘‘கிருஷ்ணர் அவதரித்த திருநாளைக் கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடும் அனைவருக்கும் இதயம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா பெருந்தொற்றிலிருந்து அனைவரும் முழுமையாக விடுபட்டு ஆரோக்கியமாக வாழ்ந்திட பிரார்த்தனை செய்வோம். கீதாஉபதேசத்தை நெஞ்சில் நிறுத்திடுவோம்’’ என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Tags : Srikrishna Jayanti , Srikrishna Jayanti, Leaders, Greetings
× RELATED பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த...