×

சுற்றுச்சூழல் மாசடைவதை கட்டுப்படுத்த திருப்பதி தேவஸ்தானத்துக்கு புதிய 35 எலெக்ட்ரிக் கார்கள்: அதிகாரிகள் பயன்படுத்த வாங்கப்பட்டது

திருமலை: திருமலையில் சுற்றுச்சூழல் மாச அடைவதை கட்டுப்படுத்த தேவஸ்தான அதிகாரிகளுக்கு 35 எலெக்ட்ரிக் கார்கள் வாங்கப்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளின் வசதிக்காக, 60 கார்கள் வாடகைக்கு எடுத்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றில், 40 கார்கள் உள்ளூர் பயன்பாட்டுக்காகவும், 20 கார்கள் நீண்ட தூர பயணத்துக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
தற்போது, டீசல், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரக்கூடிய நிலையில் கார்களில் இருந்து வரும் புகையால் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து வருகிறது. அவற்றுக்கு மாற்றாக பேட்டரியால் இயங்கும் எலெக்ட்ரிக் கார்களைப் பயன்படுத்துமாறு ஒன்றிய அரசு அறிவுறுத்தி வருகிறது.

அதன்படி, திருமலை திருப்பதி தேவஸ்தானம் எலெக்ட்ரிக் கார்களை வாங்கி பயன்படுத்த முடிவு செய்து, டாடா நிறுவனத்தின் 35  எலெக்ட்ரிக் கார்களை வாங்கி உள்ளது. இவை 6 ஆண்டுகளுக்கு மாத தவணை திட்டத்தில் வாங்கப்பட்டுள்ளது.  இந்த கார்கள் ஒருமுறை சார்ஜ்  செய்தால், 250 கி.மீ. துாரம் செல்லக் கூடியவை. இதற்காக திருமலை மற்றும்  திருப்பதியில் சார்ஜிங் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. டீசல், பெட்ரோல் கார்களுக்கு தேவஸ்தானம் இப்போது மாத வாடகையாக ஒரு காருக்கு ₹24 ஆயிரம் முதல் ₹35 ஆயிரம் வரை தருகிறது. இதற்காக ஆண்டுக்கு, ₹1.15 கோடி செலவாகிறது. ஆனால், எலெக்ட்ரிக் கார்களைப் பயன்படுத்தும்போது இந்த செலவு, ₹2.30 கோடியாக அதிகரிக்கிறது.


Tags : Tirupati Devasthanam , Environment, Pollution, Tirupati Temple, Cars
× RELATED திருப்பதி தேவஸ்தானம் பங்களிப்பில் இலங்கையில் ஏழுமலையான் கோயில்