ராமர் இல்லையேல் அயோத்தி இல்லை: ஜனாதிபதி கோவிந்த் பேச்சு

லக்னோ: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரப் பிரதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.  நேற்று அவர் ராமர் கோயில் கட்டப்பட்டு வரும் அயோத்தி நகரை பார்வையிட்டார். ராமாயணம் தொடர்பான  கூட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில்அவர் பேசுகையில்,   ‘‘ராமர் இல்லாமல் அயோத்தி ஒன்றுமே இல்லை. எங்கு ராமர் இருக்கிறாரோ அங்குதான் அயோத்தி இருக்கும். ராமர் நிரந்தரமாக அயோத்தியில் வசித்து வருகிறார். எனது குடும்பத்தினர் எனக்கு பெயர் வைத்ததின் மூலம், அவர்கள் கடவுள் ராமர் மீது வைத்திருந்தத்தை பற்றை காணலாம்.

ராமர் நாடு கடத்தப்பட்டபோது, அவர் போருக்காக அயோத்தி வீரர்களை அழைக்கவில்லை. அவர் பழங்குடியினரான கோல், பீல், வானரர்களை திரட்டி தனது படையை உருவாக்கினார். அவரது பிரசாரத்தில் கழுகுவையும் உள்ளடக்கி இருந்தார். அவர் பழங்குடியினர் உடனான நட்பையும், அன்பையும் வலுப்படுத்தினார்,” என்றார். பின்னர், ராமர் கோயில் கட்டும் இடத்தை பார்வையிட்ட ஜனாதிபதி, குடும்பத்துடன் ராம்லாலா சென்று ராமபிரானை வழிபட்டார்.

Related Stories: