×

தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு; 24 மாவட்டங்களில் புதிய உயிரிழப்பு இல்லை: சுகாதாரத்துறை அறிக்கை..!

சென்னை: தமிழகத்தில் மேலும் 1,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 26,11,837 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு, குணமடைந்தோர் விவரங்கள் குறித்து தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,

* தமிழகத்தில் மேலும் 1,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 26,11,837 ஆக அதிகரித்துள்ளது.

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 1,753 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 25,59,637 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 34,878 ஆக உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் 04 பேரும், அரசு மருத்துவமனையில் 18 பேரும் உயிரிழந்துள்ளனர்.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 189 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 543786 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை 4,20,15,963 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,61,974 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் 17,322 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 15,25,149 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 868 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 10,86,650 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 670 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை மொத்தம் 38 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாரும் பாதிக்கப்படவில்லை.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 288 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அரசு மையங்கள் 69; தனியார் மையங்கள் 219.

Tags : Tamil Nadu ,Health Department Report , Corona impact continues to decline in Tamil Nadu; No new casualties in 27 districts: Health report
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...