×

புதுவை கடலில் மீனவர்கள் மோதலால் பதற்றம் நீடிப்பு: 600 பேர் மீது வழக்கு

புதுச்சேரி: புதுச்சேரியில் வீராம்பட்டினம், நல்லவாடு மீனவர்கள் இடையே சுருக்குமடி வலை விவகாரம் தொடர்பாக நடுக்கடலில் பயங்கர மோதல் ஏற்பட்டது. இருதரப்பும் ஆயுதங்களுடன் மோதிக்கொண்டதால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். வம்பாகீரப்பாளையத்திலும் மோதல் சூழல் ஏற்பட்டதால் போலீசார் அங்கும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மோதல் தொடர்பாக வீராம்பட்டினம், நல்லவாடு, வம்பாகீரப்பாளையம் மீனவ கிராமங்களை சேர்ந்த 600க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பதற்றம் நீடிப்பதால் 3 கிராமங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக 3 கிராமங்களை சேர்ந்த தலா 200 பேர் என மொத்தம் 600க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே, நல்லவாடில் மணவெளி தொகுதி எம்எல்ஏவும், சபாநாயகருமான செல்வம், இன்று காலை அப்பகுதி மீனவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.

Tags : New Sea , Prolonged tension over fishermen clash in Puduvai sea: Case against 600 people
× RELATED மோடியின் ஆதிக்கத்தில் இருந்து நாடு...