×

காபூல் விமான நிலையத்தை கட்டுப்பாட்டில் எடுக்கும் தலிபான்கள்: விமான நிலைய சோதனைச்சாவடிகள், நுழைவாயில்களில் தலிபான்கள்..!

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து மக்களை விமானம் மூலம் வெளியேற்றும் பணி முடிவுக்கு வருவதை அடுத்து காபூல் விமான நிலையத்தை கட்டுப்பாட்டில் எடுக்க தலிபான் அமைப்பு தீவிரம் காட்டி வருகிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து அங்கிருந்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் படைகள் வெளியேறி வருகின்றன. வரும் 31-ம் தேதி அமெரிக்கா தனது படைகளை விலக்கிக்கொள்வதற்கான இறுதி நாளாக அறிவித்துள்ளதால் காபூல் விமான நிலையத்தை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் நடவடிக்கையில் தலிபான்கள் ஈடுபட்டு வருகின்றன. அமெரிக்கா தனது நாட்டினரை வெளியேற்றும் நடவடிக்கையில் இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் அமெரிக்காவில் அந்நாட்டை சேர்ந்த ஆயிரம் பேர் மட்டுமே எஞ்சியிருக்க கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றன.

பிரிட்டன் படைகள் முழுமையாக விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளன. அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறும் நிலையில் காபூல் விமான நிலையம் தாலிபான்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக காபூல் விமான நிலைய வாயில்கள் மற்றும் சோதனை சாவடிகளில் தலிபான் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அண்மையில் காபூல் விமான நிலையத்தில் நிகழ்ந்த குண்டு விடுப்பு நிகழ்ந்ததை அடுத்து சோதனை சாவடிகளை தலிபான்கள் அதிகரித்துள்ளனர். இது தொடர்பான செயற்கை கோல் படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.


Tags : Taliban ,Kabul airport , Taliban take control of Kabul airport: Taliban at airport checkpoints, entrances ..!
× RELATED ஆப்கானிஸ்தானில் 13 வயதிற்கு மேல் பெண்கள் பள்ளிகளுக்கு செல்ல தடை