செந்துறைக்கு புறவழிச்சாலை, பாலிடெக்னிக் கல்லூரி முந்திரி தொழிற்சாலை அறிவித்த முதல்வருக்கு நன்றி: ஒன்றிய திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

செந்துறை: செந்துறை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நடைபெற்றுவரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் புறவழிச்சாலை அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து செந்துறை திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரியலூர் மாவட்டம் செந்துறையில் உள்ள குன்னம் சட்டமன்ற தொகுதி முகாம் அலுவலகத்தில் திமுக ஒன்றிய செயற்குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் இளங்கோவன், ராஜேந்திரன், இளஞ்செழியன், சசிகுமார், சிவ.பாஸ்கர், விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் நடைபெற்று வரும் சட்டத்தொடரில் செந்துறைக்கு தமிழக அரசு பொறுப்பேற்ற 100 நாட்களில் செந்துறை ஒன்றியத்திற்கு பாலிடெக்னிக் கல்லூரி, முந்திரி தொழிற்சாலை, நீதி மன்றக்கட்டிடம் மற்றும் புறவழிசுற்றுச்சாலை அமைத்திட ஆனை பிறப்பித்த தமிழக முதல்வர்க்கும் பரிந்துரை செய்த தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்எஸ்.சிவசங்கருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், செந்துறை ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்தி ஆணை பிறபித்திட முதல்வர் மற்றும் அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற 100 நாட்களில் தமிழகத்தில் பெருமளவில் பெருகி வந்த நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்தி தமிழக மக்களுக்கு 100 ஆண்டுகள் செய்ய வேண்டிய மக்கள் நலத்திட்டங்களை 100 நாட்களில் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இக்கூட்டம் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து தமிழக அரசின் 100 நாள சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை செந்துறை முக்கிய வீதிகளில் வினியோகித்தனர். இதில், கொளஞ்சி பன்னீர்செல்வம் கருணாநிதி ராஜேந்திரன் மாரிமுத்து ஆனந்தன் சுந்தர் தர்மராஜ் வெற்றி பொன்னுசாமி கருணாநிதி செல்வம் செந்தமிழ்ச்செல்வன் ரமணி சண்முகம் உள்ளிட்ட கழக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More