×

விளையாட்டின் மீதுள்ள இந்த ஆர்வமே மேஜர் தயான் சந்துக்கு செலுத்தும் மிக சிறந்த அஞ்சலி: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: விளையாட்டின் மீதுள்ள உத்வேகம் நின்று விட நாம் விட்டு விட கூடாது என பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று பேசியுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த பாராஒலிம்பிக் போட்டியில், மகளிர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்களை பவினாபென் பட்டேல் வெள்ளி வென்று சாதனை படைத்து உள்ளார்.  அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில், பிரதமர் மோடி வானொலி வழியே ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்று கிழமையில் மக்களிடம் பேசும் மன் கி பாத் நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது. இதில் பேசிய பிரதமர், விளையாட்டின் மீதுள்ள இந்த உத்வேகம் நின்று விட நாம் விட்டு விட கூடாது.  நம்முடைய கிராமங்கள், நகரங்கள் ஆகியவற்றின் விளையாட்டு மைதானங்கள் நிரம்ப வேண்டும்.  அனைவரும் பங்கேற்பதன் மூலம் மட்டுமே, விளையாட்டில் அடைய வேண்டிய தகுதியான உயரத்தினை இந்தியா அடையும் என கூறியுள்ளார்.

இந்த ஆண்டில், 40 ஆண்டுகளுக்கு பின்பு ஆக்கி போட்டியில் நாம் ஒலிம்பிக் பதக்கம் வென்று உள்ளோம்.  மேஜர் தியான் சந்த் இன்று உயிருடன் இருப்பார் என்றால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார் என நீங்கள் கற்பனை செய்து கொள்ளலாம். இன்றைய இளைஞர்களிடம் விளையாட்டின் மீது உள்ள ஈர்ப்பு பற்றி நாம் காண முடிகிறது. விளையாட்டின் மீதுள்ள இந்த ஆர்வமே மேஜர் தியான் சந்துக்கு செலுத்தும் மிக சிறந்த அஞ்சலி என கூறியுள்ளார்.

Tags : Major Dayan Alley ,Modi ,Mann Ki Baat , This interest in sports is the greatest tribute to Major Diane Alley: Prime Minister Modi's speech at Mann Ki Baat
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...