தொடர்மழை காரணமாக பிளவக்கல் பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே பிளவக்கல்லில் பெரியாறு, கோவிலாறு அணைகள் உள்ளன. இதில் பெரியாறு அணை 47.56 அடியாகும். தற்போது அணையில் 29 அடி தண்ணீர் உள்ளது. கோவிலாறு அணையில் மொத்த உயரம் 42.64 அடியாகும். தற்போது அணையில் 23 அடி தண்ணீர் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழைபெய்ததால் அணைகளில் நீா்மட்டம் உயர்ந்தது. பெரியாறு அணையில் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்காத நிலையில், நேற்று கேட் பகுதி வழியாக வராமல் மலைப்பாதை வழியாக வந்தனர்.

அத்துடன் அணையில் குளிக்கக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டிருந்தும், சுற்றுலாப்பயணிகள் ஆபத்தை அறியாமல் குளித்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கூமாபட்டி காவல்நிலைய பகுதிக்கு உட்பட்ட இடமாக அணைகள் உள்ளன. பெரியாறு அணைக்கு சுற்றுலாப்பயணிகள் மாற்றுபாதை வழியாக செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அணைக்கு வருபவர்களை கண்காணிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென என்று கூறினர்.

Related Stories:

>