×

பைனலில் சானியா ஜோடி

கிளீவ்லேண்டு: அமெரிக்காவின் கிளீவ்லேண்ட் நகரில் நடக்கும்   ‘டென்னிஸ் இன் தி லேண்ட்’ ஓபன்  மகளிர் இரட்டையர் பிரிவில்  சானியா மிர்சா இணை பைனலுக்கு முன்னேறியுள்ளது. இந்த தொடரில் அமெரிக்காவின் கிறிஸ்டினா மிக்கேலுடன் இணைந்து விளையாடி வரும் சானியா, அரையிறுதியில் நேற்று நார்வேயின் உல்ரிக்கே எய்கரி - கேத்தரின் ஹாரிசன் (அமெரிக்கா) இணையை எதிர்கொண்டார்.

டை பிரேக்கம் வரை இழுபறியாக நீடித்து கடும் போராட்டமாக அமைந்த முதல் செட்டில் சானியா- கிறிஸ்டினா ஜோடி  7-6 (7-5) என்ற கணக்கில் வென்று முன்னிலை பெற்றது. அதே உற்சாகத்துடன் 2வது செட்டில் அதிரடியாக விளையாடிய சானியா - கிறிஸ்டினா இணை 7-6 (7-5), 6-2 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 23 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. பைனலில் ஜப்பானின் ஷுகோ அவோயமா - என ஷிபஹரா ஜோடியுடன் சானியா ஜோடி மோதுகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட அனெட் கோன்டவெய்ட் (எஸ்டோனியா), இரினா பெகு (ருமெனியா) ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

Tags : Sania , In the final, the Sania pair
× RELATED கணவர் 3வது திருமணம் செய்த நிலையில்...