×

தொடர்ந்து அடுத்த மிரட்டல் கேரளாவில் சிறுவர்களை புதிதாக தாக்கும் ‘மிஸ்க்’: இதுவரை 4 குழந்தைகள் சாவு

திருவனந்தபுரம் கேரளாவில்  கொரோனாவுக்கு  அடுத்தப்படியாக ‘மிஸ்க்’ என்ற நோய் பரவி வருவது அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.  இந்த நோய்க்கு இதுவரை 4 குழந்தைகள் இறந்துள்ளனர்.கேரளாவில்  கொரோனா 2வது அலையின் தீவிரம் இன்னும் குறையவில்லை. நாளுக்கு நாள்  நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த வாரத்தில் 3  நாட்கள்களாக ஒரு நாள் பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி காணப்பட்டது. இன்று கேரளா முழுவதும் மும்மடங்கு முழு  ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், கேரளாவில் விதவிதமான நோய்கள் பரவி வருகின்றன. கொரோனா மிரட்டி கொண்டிருக்கும் நிலையில், ஜிகா வைரஸ் தாக்குதலும் இதனுடன் சேர்ந்தது.

இப்போது, புதிதாக ‘மிஸ்க்’ என்ற நோயும் வேகமாக பரவி வருவது தெரிய வந்துள்ளது.  பெரும்பாலும், கொரோனா பாதித்த 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள், குழந்தைகளைத்தான் இது தாக்குகிறது. கேரள சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர்  கூறுகையில், ‘‘கடந்த ஒன்றரை வருடத்தில் 300க்கும் மேற்பட்ட குழந்தைகளை இந்த  ேநாய் தாக்கியுள்ளது. அதில் இதுவரை 4 குழந்தைகள் மரணம் அடைந்துள்ளனர்.  மிஸ்க் நோய் பாதித்த குழந்தைகளில் 95 சதவீதம் பேர் கொரோனா பாதித்தவர்கள்,’’  என்றார். குழந்தைகளுக்கு இந்த நோய் பரவியதை தொடர்ந்து நோய் தடுப்பு  நடவடிக்கையை தீவிரபடுத்த கேரள சுகாதாரத்துறை தீர்மானித்துள்ளது.

அறிகுறிகள்
* கொரோனா  பாதித்த 18 வயதுக்கும் குறைவான சிறுவர்கள், குழந்தைகளை 3 முதல் 4 வாரங்களில்  மிஸ்க் நோய் பாதிக்கிறது.
* கடுமையான காய்ச்சல்தான் இந்த ேநாயின் முக்கிய  அறிகுறி.
* மேலும், ேதாலில் சிவந்த நிறத்தில் தடிப்புகள் ஏற்படும்.
* மெட்ராஸ் ஐ வருவது போல் கண்களில் சிவப்பு நிறம், வாய்க்குள்  தடித்தல், ரத்த அழுத்தம் குறைவது உள்பட அறிகுறிகள் காணப்படும்.

Tags : Misk ,Kerala , Following, intimidation Kerala, boys, 4 children killed
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...