×

ஒருங்கிணைந்த நீர் மேலாண்மையை உறுதி செய்ய ₹17.17 கோடியில் மாதிரி கிராமங்கள் திட்டம் : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்

சென்னை: ஒருங்கிணைந்த நீர்மோண்மையை உறுதி செய்வதற்காக ₹17.174 கோடியில் மாதிரி கிராமங்கள் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  சட்டப்பேரவையில் வேளாண்மை-உழவர் நலத்துறை கொள்கை விளக்கக்குறிப்பில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியிருப்பதாவது:  மாதிரி கிராமத் திட்டத்தில் விழிப்புணர்வு கூட்டங்கள், நுழைவுநிலை நடவடிக்கைகள், சமுதாய நீர் நடப்பு, வளங்களுக்கான நிலப்படம் வரைதல், ஒற்றைச்சாளரச் செய்தி மற்றும் தகவல் மையம் அமைத்தல் மற்றும் பிற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 2021-22ம் ஆண்டில் ₹17.174 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். தமிழகத்தில் பாரம்பரிய நெல் வகைகளை திரட்டி பாதுகாக்கும் விதமாக, அரசு விதைப்பண்ணைகளில் 200 ஏக்கரில் ₹25 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் விதை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படும்.

உள்ளூர் விவசாய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய இயந்திரங்களை கண்டுபிடிக்கும் விவசாயிகளை ஊக்கும்விக்கும் வண்ணம் பரிசுகள் வழங்கப்படும். பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து பயிரிடும் விவசாயிகளை ஊக்குவிக்க 2018-19ம் ஆண்டு முதல் பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது வழங்கப்படுகிறது. இந்த விருது பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாத்தும், பயிரிட்டும் மாநில அளவில் அதிக மகமூல் பெறும் விவசாயிகளுக்கும் பரிசுத்தொகையாக முறையே ₹1,00,000, ₹75,000 மற்றும் ₹50,000 வழங்கப்படும். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : crore ,Minister ,MRK ,Panneerselvam , Integrated, Water Management, Model Villages, Minister
× RELATED நீர்ப்பாசன திட்டத்திற்காக ₹50 கோடி...