×

₹50 கோடியில் கொளத்தூரில் வண்ண மீன் வர்த்தக மையம்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்

சட்டப்பேரவையில் மீன்வளத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு பிறகு அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
* சென்னை கொளத்தூர் பகுதியில் வண்ண மீன்கள் உற்பத்தி விற்பனை மற்றும் ஏற்றுமதி பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தொழிலை தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ள சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் பயனடையும் வகையில் வண்ண மீன் உற்பத்தியினை பெருக்கிடவும், வண்ண மீன்களை எளிதாக சந்தைப்படுத்திடவும் மற்றும் ஏற்றுமதி மூலம் தமிழ்நாட்டின் வண்ண மீன் வர்த்தகத்தை அதிகரித்தடவும் ₹50 கோடியில் சென்னை கொளத்தூரில் வண்ண மீன் வர்த்தக மையம் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் சர்வதேச தரத்தில் நிறுவப்படும்.
* தமிழ்நாட்டில் உள்ள 12 மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் முக்கிய மீன் இறங்கு தளங்களில் இருந்து மீன் பிடிக்க செல்லும் படகுகளுக்கு ₹30 லட்சம் செலவில் இணையதளம் மூலம் மின்னணு மீன்படி அனுமதி சீட்டுகள் வழங்கப்படும்.
* தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் வியாபார நடவடிக்கைகளை மேம்படுத்தும் பொருட்டு, சென்னை சேத்துப்பட்டு பசுமை பூங்கா-மீன் காட்சியக பொருட்கள் விற்பனை மையத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
* செங்கல்பட்டு மாவட்டம் முட்டுக்காடு மீன்வளர்ப்பு தொழில் காப்பகம் மற்றும் தொழிற்சார் பயிற்சி இயக்குனரகத்தில் கொடுவா மீன்களுக்கு தீவனம் மற்றும் சிறந்த பண்ணை மேலாண்மை முறைகள் ₹80 லட்சம் செலவில் அமைக்கப்படும்.
* திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி டாக்டர் எம்ஜிஆர் மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நீருயிரி வளர்ப்பு மற்றும் மீன்வளத்திற்கான மின்னணு விரிவாக்க மையம் ஒரு கோடியே 6 லட்சம் செலவில் நிறுவப்படும்.

Tags : 50 crore ,Color Fish Trade Center ,Kolathur ,Minister ,Anita Radhakrishnan , 50 crore, Kolathur, Color Fish, Trade Center
× RELATED நீர்ப்பாசன திட்டத்திற்காக ₹50 கோடி...