ஆவின் பால் விலை குறைப்பால் விற்பனை 1.74 லட்சம் லிட்டராக அதிகரிப்பு: அமைச்சர் நாசர் தகவல்

சென்னை: சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பால்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கூறியிருப்பதாவது: ஆவின் பால் லிட்டர் ஒன்றுக்கு ₹3 குறைத்து 16.5.2021 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விற்பனை விலை குறைப்பு காரணமாக நாளொன்றுக்கு சராசரியாக 1.74 லட்சம் லிட்டர் பால் விற்பனை அதிகரித்துள்ளது.

 தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களால் உற்பத்தி செய்யப்படும் பால் மற்றும் பால் பொருட்கள் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறநகர் பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.சென்னை நகரில் ஆவின் பால் அதிக அளவில் விற்பனையாகிறது. இதன் மூலம் 2019-20ம் ஆண்டில் இருந்து ₹19.50 கோடி மாதாந்திர சராசரி விற்பனையானது தற்போது 2020-21ம் ஆண்டில் ₹22.11 கோடியாக உயர்ந்துள்ளது.

Related Stories:

More
>