×

அம்பத்தூர், சோழிங்கநல்லூர் பால்பண்ணையில் ₹2.5 கோடியில் உட்கட்டமைப்பு வசதி: பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமிப்பு துறை, மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை, பால் வளத்துறை ஆகியவை மீதான மானிய கோரிக்கைகளின் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் பால் வளத்துறைகளின் மீதானா சட்டப்பேரவை உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு சா.மு. நாசர் பதிலளித்து பேசியதாவது: சென்னையில் ஒரு நாளைக்கு சராசரியாக 13 லட்சத்து 53 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. இதனை 2021-22ம் ஆண்டில் 15 லட்சமாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். ஆவின் பொருட்களை துபாய் , அபுதாபி, ஓமன் அமெரிக்காவின்  கலிபோர்னியா போன்ற வெளிநாடுகளில் விநியோகம் செய்ய முதற்கட்ட நடவடிக்கைகள் முடிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிதியாண்டின் இறுதிக்குள் 200 புதிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்படும்.
பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் முக்கியமான சேவைகளில் ஒன்றான, அவர்கள் இல்லங்களுக்கு நேரடியாக சென்று கால்நடைகளுக்கு இலவச மற்றும் அவசர  சிகிச்சை வசதிகளை ஏற்படுத்த 162 நடமாடும் கால்நடை மருத்துவ வழித்தடங்கள் ₹6 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்றார்.

இதைத்தொடர்ந்து பால்வளத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
* செறிவூட்டப்பட்ட பால் பொருட்களான மோர், தயிர், கப் தயிர் தயாரிக்கும் அதிநவீன இயந்திரங்கள் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் ₹3 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்படும்.
* அம்பத்தூர், சோழிங்கநல்லூர், திருச்சி மற்றும் கோயம்புத்தூர் பால் பண்ணைகளில் திரட்டு பால் தயாரிக்க நவீன சவ்வூடு வடிகட்டுதல் தொழில்நுட்பத்துடன் கூடிய உட்கட்டமைப்பு வசதிகள் ₹2 கோடியே 50 லட்சம் செலவில் அமைக்கப்படும்.
* பால் பொருட்கள், சிப்பம் கட்டும் பொருட்கள் மற்றும் மூலப்பொருட்களுக்கான ஆய்வு கூடம், ஆராய்ச்சி மற்றும் உருவாக்கம், நுண்ணுயிரியல் பகுப்பாய்வு கூடம் அம்பத்தூர் பால்பண்ணையில் ₹10 கோடியில் நிறுவப்படும்.

Tags : Ambattur ,Cholinganallur ,Dairy ,Minister ,Nasser , Ambattur, Cholinganallur, Dairy, Minister Nasser
× RELATED சென்னையில் இருந்து விமான நிலையம் வந்த...