செங்கல்பட்டு உள்பட 6 மாவட்டங்களில் ₹411 கோடி மதிப்பில் மீன் இறங்குதளங்கள்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் மீன்வளத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு பிறகு அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

* செங்கல்பட்டு மாவட்டத்தில் கொக்கிலமேடு, கடலூர் பெரிய குப்பம், கடலூர் சின்னக்குப்பம், கடலூர் ஆளிக்குப்பம் ஆகிய மீனவ கிராமங்கள் கடலரிப்பினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. கடல் சீற்றத்தினால் இக்கிராமங்களில் உள்ள மீனவர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

எனவே, இக்கிராமங்களில் உள்ள சுமார் 2,800 மீனவ குடும்பங்கள் பயனடையும் வகையில் கொக்கிலமேடு, கடலூர் பெரியகுப்பம், கடலூர் சின்னக்குப்பம், கடலூர் ஆளிக்குப்பம் ஆகிய இடங்களில் ₹39 கோடியில் மீன் இறங்குதளங்கள் அமைக்கப்படும்.

* விழுப்புரம் மாவட்டம் எக்கியார் குப்பம் மீன் இறங்குளம் மேம்பாட்டு பணிகள் மற்றும் அனுமந்தை கிராமத்தில் புதிய மீன்  இறங்கதளம் ₹10 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் 3200 மீனவ மக்கள் பயன் அடைவர்.

* செங்கல்பட்டு மாவட்டம் பழைய நடுக்குப்பம், புதுநடுக்குப்பம், அங்காளம்மன் குப்பம், செம்மஞ்சேரி குப்பம், கரிகாட்டுக்கப்பம் ஆகிய மீனவ கிராமங்களில் ₹57 கோடியில் மீன் இறங்குதளங்கள் அமைக்கப்படும். இதனால், 4,500 மீனவ மக்கள் பயன் அடைவர்.

* கடலூர் மாவட்டத்தில் வெள்ளார் முகத்துவாரம் அடிக்கடி தூர்ந்து போவதால் இங்குள்ள சுமார் 12 ஆயிரம் மீனவர்கள் பாதிப்பு அடைக்கின்றனர். எனவே, மீனவர்களின் சிரமங்களை போக்கிடும் பொருட்டு நேர்கல் சுவர் அமைத்து முகத்துவாரத்திற்கு நிலைப்பு தன்மை ஏற்படுத்த ₹30 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

* கடலூர் மாவட்டம் பெரிய குப்பம், புதுக்குப்பம், சி.புதுப்பேட்டை ஆகிய கடலோர கிராமங்களில் கடல் அரிப்பு தடுப்பு சுவர்களுடன் கூடிய புதிய மீன்பிடி இறங்குதளங்கள் ₹25 கோடியில் அமைக்கப்படும். இதனால், இங்குள்ள 4 ஆயிரம் மீனவர்கள் பயன் அடைவர்.

* செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் கிராமத்தில் கிழக்கு பகுதியில் ₹3 கோடியில் மீன் இறங்குதளங்கள் அமைக்கப்படும்.

Related Stories:

>