×

போலி பத்திரிகையாளர்களை களைய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் என்ற அமைப்பை உருவாக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: போலி பத்திரிகையாளர்களை களைய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் என்ற அமைப்பை உருவாக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைப்பை 3 மாதங்களில் ஏற்படுத்த தமிழ்நாடு அரசை உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

பிரஸ்கிளப், பத்திரிகையாளர் சங்கங்களை அங்கீகரிக்கும் அதிகாரத்தை பிரஸ் கவுன்சிலுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் மட்டுமே பத்திரிகையாளர் சங்கங்களுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.


தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் மூலமே பத்திரிகையாளர்களுக்கு பஸ்பாஸ், வீட்டுமனை உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும், பத்த்ரிக்கையாளர்களுக்கு சலுகைகளை நேரடியாக வழங்கக்கூடாது என நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளார். நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தி அது தொடர்பான அறிக்கையை 4 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Icourt ,Tamil Nadu Press Council , Fake journalist, retired judge, Tamil Nadu Press Council, iCourt
× RELATED 2021-ல் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில்...