அத்திமரப்பட்டி சாலையில் அபாய பள்ளம்: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

ஸ்பிக்நகர்: அத்திமரப்பட்டியில் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி அருகேயுள்ள அத்திமரப்பட்டடி  வடக்குத்தெருவை அடுத்துள்ள விவசாய நிலப்பகுதிக்கு தண்ணீர் செல்வதற்கு  பாய்மான வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் பகுதியில் உள்ள சாலையை  கடந்து செல்வதற்காக பாலம் அமைக்கப்பட்டு ரோடு போடப்பட்டுள்ளது. கடந்த சில  நாட்களுக்கு முன்னர் பாலத்தின் சுவற்றின் அருகே திடீரென பள்ளம் ஏற்பட்டது.  

இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் சூழல்  ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதிகளை சேர்ந்த மக்கள் சாலையின் பள்ளம்  தெரிவதற்காக கல் மற்றும் மரத்தாலான தடுப்புகள் ஏற்படுத்தி உள்ளனர். அந்த  பள்ளம் மேலும் விரிவடையாமல் இருப்பதற்கும், விபத்துகள் ஏற்படுவதை தடுப்பதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு விரைந்து சீரமைக்க வேண்டுமென  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>