எந்த அழுத்தமும் இல்லாமல் உங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள் : பவீனா படேலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!!

டெல்லி : பாராலிம்பிக்ஸ் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பவீனா படேலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருப்பதுடன், நாளைய போட்டியில் அவர் வெற்றி பெறுவதற்கு நாடு அவருக்கு அளிக்கும் ஆதரவையும் குறிப்பிட்டுள்ளார்.பாராலிம்பிக் டேபிள் டென்னிஸில் இந்தியாவின் பவினா பென் படேல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார்.  இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால் பவினா பென் படேலுக்கு வெள்ளி அல்லது தங்கம் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரதமர் தமது சுட்டுரைச் செய்தியில்,

“வாழ்த்துகள் பவினா படேல்! நீங்கள் மிகச் சிறப்பாக விளையாடினீர்கள்.

முழு நாடும் உங்களது வெற்றிக்காக பிரார்த்தனை செய்து கொள்வதுடன் நாளை உங்களுக்கு உற்சாகமளிப்பார்கள். எந்த அழுத்தமும் இல்லாமல் உங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள். உங்களது வெற்றி, ஒட்டுமொத்த நாட்டிற்கு எழுச்சியூட்டுகிறது”, என்று கூறியுள்ளார்.

Related Stories:

>