×

அங்கீகரிக்கப்படாத டிஜிட்டல் கடன் வழங்கும் தளங்கள்/மொபைல் செயலிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

சென்னை : அங்கீகரிக்கப்படாத டிஜிட்டல் கடன் தளங்கள்/மொபைல் செயலிகள், விரைவாகவும், தடையில்லாமலும் கடன்களை வழங்குவதாக அளிக்கும் வாக்குறுதிகளுக்குத் தனிநபர்கள்/சிறு வணிக நிறுவனங்கள் பலியாவது அதிகரிப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.  இந்த அறிக்கைகள் அதிகப்படியான வட்டி விகிதங்கள் மற்றும் கூடுதல் மறைக்கப்பட்ட கட்டணங்கள்  கடன் வாங்குபவர்களிடமிருந்து கோரப்படுவது, ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் தவறான மீட்பு முறைகளைக் கையாளுவதாகத் தெரிவிக்கின்றன.

சட்டரீதியான பொதுக் கடன் நடவடிக்கைகளை, வங்கிகள், ஆர்பி ஐயில் பதிவு செய்யப்பட்ட வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (என்.பி.எஃப்சி) மற்றும் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் பணக் கடன் சட்டம் போன்ற சட்டரீதியான விதிகளின் கீழ் மாநில அரசுகளால் கட்டுப்படுத்தப்படும் நிறுவனங்கள் மட்டுமே மேற்கொள்ள முடியும்.  இதுபோன்ற நேர்மையற்ற செயல்களுக்கு இரையாக வேண்டாம் என்றும், ஆன்லைனில் அல்லது மொபைல் பயன்பாடுகள் மூலம் கடன்கள் வழங்கும் நிறுவனம்/நிறுவனத்தின் மூலத்தைச் சரிபார்க்க வேண்டியும் பொது மக்கள் எச்சரிக்கப்படுகிறார்கள்.  மேலும், நுகர்வோர் ஒருபோதும் அடையாளம் தெரியாத நபர்கள், சரிபார்க்கப்படாத /அங்கீகரிக்கப்படாத செயலிகளில் ரிசீசி ஆவணங்களின் நகல்களைப் பகிரக்கூடாது, மேலும் அந்தச் செயலிகள் மற்றும் அந்தச் செயலி சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கு விவரங்களை சம்பந்தப்பட்ட சட்ட அமலாக்க நிறுவனங்களுக்குப் புகாரளிக்க வேண்டும் அல்லது சச்செட் போர்ட்டலைப் பயன்படுத்தி  (http://sachet.rbi.org.in) ஆன்-லைனில் புகாரைப் பதிவு செய்யலாம்.

வங்கி மற்றும் என்.பி.எஃப்.சி சார்பாக டிஜிட்டல் கடன் வழங்கும் தளங்கள், சம்பந்தப்பட்ட வங்கி அல்லது என்.பி.எஃப்.சி பெயரை வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக வெளியிடுவதை ரிசர்வ் வங்கி கட்டாயமாக்கியுள்ளது.  ரிசர்வ் வங்கியில் பதிவுசெய்யப்பட்ட ழிஙிதிசி களின் பெயர்கள் மற்றும் முகவரிக்கு இங்கே அணுகலாம் மற்றும் ரிசர்வ் வங்கியால் கட்டுப்படுத்தப்படும் நிறுவனங்களுக்கு எதிரான புகார்களை http://cmc.rbi.org.in இல் பதிவு செய்யலாம்.

Tags : RBI , மொபைல் செயலிகள்
× RELATED ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம்..!!