புவிசார் குறியீடு பெற்ற பவானி ஜமுக்காளம், ஆரணி பட்டு உள்ளிட்ட பாரம்பரிய பொருட்களுக்கு அஞ்சல் உறை வழங்கி அஞ்சல் துறை கவுரவம்

சென்னை : புவிசார் குறியீடு பெற்ற பவானி ஜமுக்காளம், ஆரணி பட்டு உள்ளிட்ட பாரம்பரிய பொருட்களுக்கு அஞ்சல் உறை வழங்கி அஞ்சல் துறை கவுரவம் அளித்துள்ளது.

இது தொடர்பாக அஞ்சல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

இந்தியா@75 திட்டத்தை நினைவுகூரும் வகையில் மற்றும் தன்னிறைவு இந்தியாவுக்கான இந்திய அரசின் முன்முயற்சியான ஆத்மநிர்பர் பாரத் அங்கீகாரத்தின் அடையாளமாக, தமிழ்நாடு புவிசார் குறியீடு (GI) தயாரிப்புகளின் மூன்று சிறப்பு அஞ்சல் உறைகளான, தோடா எம்பிராய்டரி (Toda Embroidery), பவானி ஜமக்காளம் (Bhavani Jamakkalam) மற்றும் ஆரணி பட்டு (Arani Silks)ஆகியவை டாக்டர் K.மணிவாசன், இஆப, தமிழ்நாடு அரசு முதன்மை செயலாளர், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, திரு.T.P. ராஜேஷ்,இஆப, மேலாண்மை இயக்குனர், கோ ஆப்டெக்ஸ், திருமதி P. காந்திமதி, பொது மேலாளர் (நிர்வாகம்), TAHDCO மற்றும் திரு.B.செல்வகுமார், தமிழ்நாடு வட்டத்தின் முதன்மை அஞ்சல் துறை தலைவர் முன்னிலையில் 26.08.2021 அன்று முதன்மை அஞ்சல் துறை தலைவர் அலுவலகத்தில் நடந்த விழாவில் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தால் வெளியிடபட்டது.

திருமதி. வீணா R. ஸ்ரீனிவாஸ், அஞ்சல் துறை தலைவர்(அஞ்சல் &வணிக மேம்பாடு),தமிழ்நாடு வட்டம், திரு கா. சோமசுந்தரம், சென்னை நகர மண்டல அஞ்சல் சேவைகள் இயக்குனர் மற்றும் திரு. பா. ஆறுமுகம், அஞ்சல் சேவைகள் இயக்குனர் (தலைமையகம்) இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டார்கள்.மேலும், மண்டல அஞ்சல் துறை தலைவர்கள் இந்நிகழ்ச்சியில் காணொலி மூலமாக கலந்து கொண்டனர்.

Related Stories:

More