×

பூதலூர் வட்டாரத்தில் நெற்பயிரில் கருப்பு நாவாய் பூச்சி தாக்குதல்-வேளாண் அதிகாரிகள் ஆய்வு

திருக்காட்டுப்பள்ளி : தஞ்சை மாவட்டம் பூதலூர் வட்டாரம் திருக்காட்டுப்பள்ளி பகுதிகளில் நெற்பயிரில் கருப்பு நாவாய் பூச்சி தாக்குதல் அதிகமாக தென்படுகிறது. இதனை கட்டுப்படுத்த பூதலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாவின் பரிந்துரைத்துள்ளார் இப்பூச்சி தாக்குதலுக்கு சாதகமான சூழ்நிலை:- வடிகால் வசதி இல்லாத வயல்களில் இதன் தாக்குதல் மிகுந்து காணப்படும், ஆகஸ்ட் முதல் அக்டோபா் மாதம் வரை இதன் தாக்குதல் மிக அதிகமாக காணப்படும்.

சேதத்தின் அறிகுறிகள்: இதன் தாக்குதல் பயிரின் எல்லா வளா்ச்சி பருவங்களிளும் காணப்படும், நெற்பயிரில் தண்ணீர் மட்டத்திற்கு சற்றும் மேலான தண்டுப்பகுதிகளில் குஞ்சுகளும், வளா்ந்த பூச்சிகளும் கூட்டம் கூட்டமாக இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சும். இலைகள் ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிறமாக மாறும். தாக்கப்பட்ட வயல் தீயில் எரிந்தது போன்று காட்சியளிக்கும். பயிரின் வளா்ச்சி பருவத்தில் நடுகுறுத்து வாடி உலா்ந்தும் பூக்கும் பருவத்தில் வெண்கதிரும் தோன்றும். இது குறுத்து பூச்சியின் சேதத்தின் போன்றே காணப்படும்.

இப்பூச்சியை கட்டுப்படுத்தும் முறைகள்: நெல் வயலில் விளக்குப்பொறி அமைக்க வேண்டும். ரசாயன முறையில் கட்டுப்படுத்தலாம். இத்தாக்குதல் குறித்து வேளாண்மை துணை இயக்குனர் மத்திய திட்டம் ஈஸ்வா் தேசிய உணவு பாதுகாப்புத் திட்ட ஆலோசகா் இளஞ்செழியன், வேளாண் உதவி இயக்குனர் ராதா மற்றும் துணை வேளாண்மை அலுவலா் எபினேசன் ஆகியோர் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை பார்வையிட்டு பாிந்துரை செய்தனர்.

Tags : Puthalur , Dharapuram: Puliyankulam is a Carlon Forest Pondu in Manakkadavu Panchayat Nair Dharapuram in Tirupur District. About ௧௦ Akirs
× RELATED பூதலூரில் 1500 பனைமர விதைகள் நடும் நிகழ்ச்சி