×

பாஜகவின் வருவாய் 50% உயர்ந்துள்ளது... மக்களாகிய உங்களின் வருவாய் உயர்ந்துள்ளதா? : ராகுல் காந்தி கேள்வி!!

டெல்லி : 2019-2020ம் நிதியாண்டில் பாஜக கட்சியின் வருமானம் 50% உயர்ந்திருப்பதாக குற்றம் சாட்டிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனி நபர் வருமானம் எவ்வளவு உயர்ந்து இருக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.மக்களாட்சி சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்கிற அமைப்பு இந்திய அரசியலில் நம்பகத்தன்மையை உறுதி செய்து தேர்தலில் பணம் ஆதிக்கம் செலுத்தப்படுவதை கண்காணித்து ஆண்டுதோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது.கடந்த நிதியாண்டில் அரசியல் கட்சிகளுக்கு கிடைத்த வருமானம் மற்றும் தேர்தல் செலவினங்களை ஆய்வு செய்து ஒரு அறிக்கை வெளியிட்டது.

அதில் பாஜகவின் சொத்து மதிப்பு கடந்த நிதியாண்டில் ரூ.3,623 கோடி அளவிற்கு உயர்ந்து இருப்பது தெரியவந்துள்ளது. இதில் பெரும்பாலானவை தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக கிடைத்துள்ளது.2019-2020ம் நிதியாண்டில் காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 682 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 46% அதிகம் ஆகும். இந்த நிலையில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் பாஜகவின் வசூல் வருவாய் 50% உயர்ந்துள்ளது.பாஜகவின் வருவாய் உயர்ந்தாலும் மக்களாகிய உங்களின் வருவாய் உயர்ந்துள்ளதா?,எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags : BJP ,Rahul Gandhi , ராகுல் காந்தி
× RELATED 2014ம் ஆண்டுக்கு முன் காங்கிரஸ் பெற்ற...