×

ஒரே வாகனத்தை பல மாநிலங்களில் இயக்கும் வகையில், BH என்ற புதிய பதிவு எண் முறையை அறிமுகப்படுத்தியது ஒன்றிய அரசு!!

டெல்லி: வாகனங்களை உரிமையாளர்கள் மாநிலம் விட்டு மாநிலம் மாற்றும் போது, மீண்டும் பதிவு செய்யப்படுவதை தவிர்க்கும் வகையில், ஒன்றிய அரசு புதிய வசதி ஒன்றை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் ஒரு மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை பிற மாநிலங்களில் ஒரு ஆண்டு மட்டும் பதிவு செய்யப்படாமல் வைத்திருக்கலாம் என்ற விதி இருந்து வந்தது. இதனால் குறுகிய இடைவெளியில் மாநிலம் விட்டு மாநிலம் மாறும் ஒன்றிய அரசு ஊழியர்களும் பாதுகாப்புத் துறை பணியாளர்களும் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் மாநிலம் விட்டு மாநிலம் வாகனத்தை மாற்றும் போது, மீண்டும் பதிவு செய்வதை தவிர்க்கும் விதமாக ஒன்றிய அரசு BH என்ற புதிய பதிவு எண் முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த வரிசையில், வாகனங்களுக்கு பதிவெண் பெற்றால், அவற்றை மறுபதிவு செய்யாமல் எந்த மாநிலத்திலும் இயக்கலாம். முதற்கட்டமாக ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு துறையினருக்கு மட்டும் இந்த பதிவெண் முறையை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 4 மற்றும் அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் செயல்படும் தனியார் நிறுவனங்களும் BH வரிசை வாகன பதிவெண் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : United States Government , ஒன்றிய அரசு
× RELATED அடுத்த நிதியாண்டிற்கான உச்சவரம்பை...