×

காபூல் தற்கொலைப்படை தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்க நடத்திய வான்வழி தாக்குதலில் ஐஎஸ் கோரசான் தீவிரவாத அமைப்பின் தளபதி உயிரிழப்பு!!

காபூல் : ஆப்கன் விமான நிலையத்தில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் ஐஎஸ் கோரசான் தீவிரவாத அமைப்பின் முக்கிய கமாண்டர் கொல்லப்பட்டார். ஆப்கனை விட்டு வெளியேறும் நோக்கில் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நின்று இருந்தவர்கள் மீது நேற்று ஐஎஸ் கோரசான் தீவிரவாதிகள் அடுத்தடுத்து 2 தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்தினர். இதில் அமெரிக்க ராணுவத்தினர் உட்பட 170 பேர் கொல்லப்பட்டனர்.

தீவிரவாதிகளின் இந்த தாக்குதலால் காபூலில் பெரும் பதற்றம் நிலவும் நிலையில், அமெரிக்க ராணுவம் பதில் தாக்குதலில் இறங்கி உள்ளது.ஆப்கனில் நன்கஹர் மாகாணத்தில் உள்ள ஐஎஸ் கோரசான் தீவிரவாதிகளின் மறைவிடத்தில் அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் சரமாரியாக குண்டு வீசி தாக்கியது.இந்த தாக்குதலில் காபூல் தற்கொலைப்படை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஐஎஸ் கோரசான் தீவிரவாதி இயக்கத்தின் முக்கிய கமாண்டர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலில் பொதுமக்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டனும் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தாக்குதலை அடுத்து ஐஎஸ் கோரசான் தீவிரவாதிகள் காபூல் விமான நிலையத்தில் மீண்டும் தாக்குதல் நடத்தக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து காபூல் விமான நிலையத்தில் உள்ள அபே நுழைவு வாயில் கிழக்கு, வடக்கு நுழைவு வாயில் மற்றும் புதிய உள்துறை அமைச்சகத்தின் நுழைவு வாயில் ஆகியவற்றில் உள்ள ராணுவத்தினர், குடிமக்கள் என அனைவரும் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா எச்சரித்துள்ளது.


Tags : IS ,US ,Kabul , ஆப்கன்
× RELATED இது உங்கள் ராம ராஜ்ஜியம்: ஆம் ஆத்மி இணையதளம் தொடக்கம்