×

சென்னை சென்ட்ரல் - கயா உள்பட 10 சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே

சென்னை: நாட்டில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு கடந்த ஆண்டு மார்ச்சில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டடு சரக்கு ரயில் சேவை மட்டும் இயங்கி வந்தது. கொரோனா 2வது அலை பாதிப்புகள் குறைந்து காணப்படும் சூழலில் குறிப்பிட்ட அளவிலான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா பாதிப்புகளால் வழக்கமாக இயங்க வேண்டிய விரைவு ரயில்கள் முழு அளவில் இயக்கப்படவில்லை. இருப்பினும் தேவையை கருத்தில் கொண்டு இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டு வருகின்றன.

அத காரணமாக சென்னைசென்ட்ரல்-கயா (02390/02389), பாருனி-எர்ணாகுளம் (02521/02522), பாடலிபுத்தூர்-யஸ்வந்த்பூர் (03251/03252), தர்பாங்கா-மைசூர் (02577/02578), முஜாபர்பூர்- யஸ்வந்த்பூர் (05228/05227) ஆகிய 10 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்படுள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் மறு அறிவிப்பு வரும் வரை தற்போது இயக்கப்படும் அதே நேரத்தில், அதே வழித்தடத்தில் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Tags : Chennai ,Central - Service ,Gaia ,Southern ,Railway , Extension of service of 10 special trains including Chennai Central - Gaya: Southern Railway
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...