நைஜீரியாவில் 3 மாதங்களுக்கு முன் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 150 மாணவர்களில் 91 பேர் பிணையத்தொகை கொடுத்து மீட்பு!!

நைஜீரியா : நைஜீரியாவில் தீவிரவாதிகள் கடத்திச் சென்ற பள்ளி மாணவர்கள் 91 பேர் பிணையத்தொகை கொடுத்து மீட்கப்பட்டுள்ளனர். நைஜீரியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள நைஜர் மாகாணத்தில் உள்ள பள்ளி கூடத்தில் இருந்து கடந்த மே மாதம் 150க்கும் மேற்பட்ட மாணவர்களை தீவிரவாதிகள் கடத்திச் சென்றுவிட்டனர்.பிணைத்தொகை வழங்கவில்லை என்றால் மாணவர்களை கொன்று விடப்போவதாக தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.

இதையடுத்து சொத்துக்களை விற்று தீவிரவாதிகள் கேட்ட தொகையை பெற்றோர் அளித்ததாக தகவல் தெரிவித்தன.இந்த நிலையில் உள்ளூர் மாணவர்களையும் உடல்நலக்குறைவால் உயிரிழந்த மாணவர் ஒருவரின் சடலத்தையும் தீவிரவாதிகள் நேற்று ஒப்படைத்தனர்.மீட்கப்பட்ட மாணவர்களில் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இதனிடையே தீவிரவாதிகள் சிறைப்பிடித்து வைத்துள்ள எஞ்சிய மாணவர்களையும் மீட்க நைஜீரிய அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>