சென்னை முதல் குமரி வரை நான்கு வழிச்சாலையை ஆறு வழி சாலையாக தரம் உயர்த்த நடவடிக்கை

சென்னை: சென்னை முதல் குமரி வரை நான்கு வழிச்சாலையை ஆறு வழி சாலையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ெநடுஞ்சாலைத்துறை அமைச்சர் எவ.வேலு தெரிவித்தார்.  இதுகுறித்து சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நெடுஞ்சாலைத்துறை கொள்கை விளக்க குறிப்பில் அமைச்சர் எ.வ.வேலு கூறியிருப்பதாவது: தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் சரக்கு கையாளும் திறனை 1.5 மில்லியன் மெட்ரிக் டன்னிலிருந்து 10 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநில அளவிலான ஒன்றிய அரசின் திட்டங்களை விரைவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அதன்படி சென்னை துறைமுகத்திலிருந்து மதுரவாயல் வரை செல்லும் உயர்மட்ட சாலை. விக்கிரவாண்டி - கும்பகோணம் - தஞ்சாவூர் நான்கு வழி சாலை. கிழக்கு கடற்கரை சாலையில் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நான்கு வழி சாலையாக தரம் உயர்த்துதல். சென்னையிலிருந்து திருச்சி, மதுரை வழியாக கன்னியாகுமரி வரை நான்கு வழிச்சாலையை ஆறு வழி சாலையாக தரம் உயர்த்துதல். சென்னை துறைமுகத்தில் இருந்து மணலி - திருவொற்றியூர் சந்திப்பு வரை போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கடல் பாலம் அமைத்தல் ஆகிய நடவடிக்கை எடுக்கப்படும்.  

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* சென்னையில் இருந்து கன்னியாகுமரி இடையேயான தூரம் 704 கி.மீ.

* சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 13 மாவட்டங்கள் வழியாக செல்கிறது.

* சென்னையில் இருந்து திண்டிவனம் வரை தேசிய  நெடுஞ்சாலை எண் 32, திண்டிவனம்- விழுப்புரம் இடையே தேசிய நெடுஞ்சாலை எண்  132, விழுப்புரம்- மதுரை இடையே தேசிய நெடுஞ்சாலை எண் 38, மதுரை-  கன்னியாகுமரி இடையே தேசிய நெடுஞ்சாலை எண் 44 என அழைக்கப்படுகிறது.

Related Stories: