×

மாமல்லபுரத்தில் நவீன பஸ் நிலையம்: திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி வலியுறுத்தல்

சென்னை : சட்டப்பேரவையில் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை மானியக்கோரிக்கை விவாதத்தில் திருப்போரூர் தொகுதி உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி (விசிக) பேசியதாவது:  திருப்போரூர் தொகுதி மீனவ மக்களுக்கு கொக்கிலமேடு, கரிக்காட்டுக்குப்பம், தேவனேரி, நெம்மேலி, பட்டிபுலம், கானத்தூர் ரெட்டிக்குப்பம் உள்ளிட்ட பல கிராமங்களில் தூண்டில் வளைவு, வலை பின்னும் கூடம், சமுதாயகூடம் ஆகியவை தேவைப்படுகிறது. இதை அமைத்து தர வேண்டும்.   திருப்போரூர் தொகுதியில் பல இடங்களில், பட்டா வழங்கப்படுவதில்லை, காரணம் இதை பெல்ட்  ஏரியா என வரையறை செய்திருக்கிறார்கள். இந்த பெல்ட் ஏரியா உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

அதே போன்று இத்தகைய இடங்களில் இருக்கும் வசிப்பிடங்கள் பலவற்றிற்கு மின் இணைப்பு இல்லை. அவற்றிற்கு மின் இணைப்பு வழங்க வழிவகை செய்ய வேண்டும். உலக புகழ் பெற்ற சுற்றுலா தலமான மாமல்லபுரத்திற்கு ஒரு பேருந்து நிலையம் இல்லை. நவீன பேருந்து நிலையம் ஒன்றை  மாமல்லபுரத்தில் அமைத்திட வேண்டும். தாழம்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் சில அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான நிறுவனங்கள் எப்படியோ சட்டத்திற்கு புறம்பாக பட்டா பெற்று அவற்றில் குடியிருப்பு கட்டி, அதை பல பேர் வங்கிகளில் கடன் பெற்று வாங்கிய பின், அந்த பட்டா ரத்து செய்யப்பட்டுள்ளது. இப்போது தவறிழைத்த நிறுவனங்கள் கவலையின்றி இருக்க, அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டு பரிதவிக்கின்றனர், இதற்கு தீர்வு காண வேண்டும். வீடு குடியிருப்பு எஸ்.டி.பி.க்களுக்கு மின் கட்டணம் சாதாரண கட்டணமாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Mamallapuram ,Thiruporur MLA ,Balaji , Mamallapuram, Modern Bus Stand, MLA Balaji
× RELATED கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன்...