செங்கை மாவட்டத்தில் திடீர் மழை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தின் செங்கல்பட்டு, மறைமலைநகர், பொத்தேரி, கூடுவாஞ்சேரி, கேளம்பாக்கம், தாம்பரம், பல்லாவரம், திருப்போரூர், கல்பாக்கம், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், செய்யூர் உள்பட பல இடங்களில் நேற்று மாலை திடீரென மேகங்கள் திரண்டு இருள் சூழ்ந்தது. சில நிமிடங்களில் சூறைக்காற்று, இடி மின்னலுடன் மழை பெய்தது. தொடர்ந்து பெய்த மழையால் நீர் நிலைகளுக்கு நீர் வரத்து வர தொடங்கியது. பல நாட்களாக வெய்லின் கொடுமை வாட்டிய நிலையில், திடீர் மழையால்  குளிர்ந்த காற்று வீசியது.

பருவமழை துவங்குவதற்கு முன்பு மாவட்டத்தில் உள்ள முக்கிய நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள மழைநீர் கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரி அகலப்படுத்தவேண்டும். அதே போன்று ஏரிகள் அதிகமுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏரிகளுக்கு வரும் வரத்து கால்வாய்களை பொதுப்பணித்துறையினர் தூர்வாரி மராமத்து பணிகளை தீவிரப்படுத்தவேண்டும் என ஏரி நீரை பயன்படுத்தும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>