கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம்: அதிகாரிகள் அறிவுறுத்தல்

மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டல்கள், ரிசார்ட்கள், நட்சத்திர விடுதிகள், தங்கும் விடுதிகள் ஆகியவை பல மாதங்களுக்கு பின் அரசின் விதிமுறைகளுடன் திறக்கப்பட்டுள்ளன. இதைதொடர்ந்து, ஓட்டல், ரெஸ்டாரன்ட், தங்கும் விடுதிகள் ஆகியவற்றின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களுடன் அரசு அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில், கொரோனா விதிமுறைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதா, மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் நடராஜன், துப்புரவு ஆய்வாளர் ரகுபதி மற்றும் 40க்கும் மேற்பட்ட ஓட்டல், ரிசார்ட்களின் உரிமையாளர், மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>