×

ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி தீவிரம்

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகின்றன.ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் கிராமம் தோறும் வீடு வீடாக சென்று 2021-2022ம் ஆண்டிற்கான, 6 வயது முதல் 19 வயதிற்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கணக்கெடுப்பு பணி ஒன்றிய பள்ளி கல்வி மூலம் நடைபெற்று வருகிறது.

இந்த பணியில் மாவட்ட கல்வி அலுவலர் முனிசுப்புராயன் தலைமையில், வட்டார கல்வி அலுவலர் ஆறுமுகம், வட்டார வள மேற்பார்வையாளர் கோட்டீஸ்வரன், ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த கணக்கெடுப்பின்போது, கண்டறியப்படும் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்களை உடனே பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளன. ஆகஸ்ட் 10ம் தேதி துவங்கிய இப்பணி, வரும் 31ம் தேதி வரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : RKpet Union , In the RKPet Union Intensity of survey work for children going to school
× RELATED ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும்