×

சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பால் எம்டிஎஸ் கலந்தாய்வு நிறுத்தம்: ஒன்றிய அரசு திடீர் அறிவிப்பு

புதுடெல்லி: மருத்துவ படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து, குழு அமைத்து முடிவெடுக்க, 2020 ஜூலையில் மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, தி.மு.க தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய உத்தரவில், ‘மருத்துவ படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அனுமதிக்கக் கூடியது.

அதே நேரத்தில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு, மொத்த இடஒதுக்கீட்டு அளவான 50 சதவீதத்திற்கு அதிகமாக உள்ளது. அதனால், உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் அந்த இடஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது,’ என தெரிவித்தனர். இந்நிலையில். ஒன்றிய சுகாதார இயக்குனரகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘இடஒதுக்கீடு விவகாரத்தில் 25.8.2021 அன்று சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவில், அகில இந்திய இடஒதுக்கீடு விவகாரத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் வழங்க முடியாது என தெரிவித்துள்ளதால், நடப்பாண்டின் அதாவது 2021க்கான மருத்துவ படிப்பில் எம்.டி.எஸ் படிப்புக்கான கவுன்சிலிங் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த உத்தரவு மேற்கண்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை தொடரும்,’ என  கூறப்பட்டுள்ளது.



Tags : Chennai High Court ,MDS , By the judgment of the Chennai High Court MDS Consultation Stop: United States Sudden Notice
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...