திடீர் நெஞ்சுவலி ராஜஸ்தான் முதல்வருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு நேற்று முன்தினம் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து உடனடியாக அவர், ஜெய்ப்பூரில் உள்ள எஸ்எம்எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்வதற்கு பரிந்துரைத்தனர்.

இதனை தொடர்ந்து நேற்று அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் சுதிர் பண்டாரி கூறுகையில், ‘‘முதல்வர் கெலாட்டுக்கு ஸ்டென்ட் பொருத்தப்பட்டது. தற்போது அவர் நலமாக இருக்கிறார்” என்றார். அசோக் கெலாட் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடியும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் டிவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

Related Stories:

>