அசாமில் லாரி ஓட்டுனர்கள் மீது துப்பாக்கி சூடு: 5 பேர் பலி

திபு: அசாம் மாநிலத்தில் லாரி ஓட்டுனர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலியாகினார்கள். மேலும் ஒருவர் காயமடைந்தார். அசாம் மாநிலத்தின் திமா ஹசோ மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு நிலக்கரி மற்றும் சிமெண்ட் ஏற்றிக்கொண்டு லாரிகள் சென்றுகொண்டிருந்தன.

அப்போது திடீரென தீவிரவாதிகள் அந்த லாரிகள் மீது திடிரென துப்பாக்கி சூடு நடத்தினார்கள். 7 லாரிகள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். மேலும்  தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் லாரிகளுக்கு தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் லாரி ஓட்டுனர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஒருவர் காயமடைந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>