ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி: டீன் தகவல்

சென்னை: சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவில் 60  வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் தொடர் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு கொரோனா தடுப்பூசி  போடப்படும் என்று மருத்துவமனை டீன் தேரணிராஜன் தெரிவித்துள்ளார்.கொரோனா 3வது அலை அக்டோபர், நவம்பர் மாதங்களில் வரக்கூடும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதற்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், தொடர் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை நேற்று முதல் துவக்கியுள்ளனர்.

இதுகுறித்து மருத்துவமனை டீன் தேரணி ராஜன் கூறியதாவது:சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஒரு நாளைக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் புற நோயாளிகளாக சிகிச்சைக்கு வருகின்றனர். அவர்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்,  சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட  தொடர் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதா என்று விசாரித்து, பிறகு சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. அவ்வாறு வருபவர்களில் பலர் தடுப்பூசி போடவில்லை என்றே கூறுகின்றனர். இதனால் நீண்ட தூரத்தில் இருந்து வரும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் திருப்பி அனுப்பக்கூடிய நிலை ஏற்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கிட்னி பாதிப்பு, இதயகோளாறு, காசநோய் போன்று நாள்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மருந்து வாங்க வருபவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முதல்நாள் என்பதால் 50க்கும் மேற்பட்டவர்ளுக்கு மட்டும் கொரேனா தடுப்பூசி ெசலுத்தப்பட்டது. இனிவரும் நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.   இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>