×

ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரம் ப.சிதம்பரம் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடந்த 2007ம் ஆண்டு நிதி அமைச்சராக இருந்த போது ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் பெற்றுத்தருவதாக கூறி மொரிஷியசில் இருந்து சட்டவிரோதமாக சுமார் ரூ.305 கோடி பணம் பெற்றதாகவும், இது அவரது மகன் கார்த்தி சிதம்பரம் நிறுவனத்தின் மூலம் நடந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் சிபிஐ தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், ‘‘ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் உட்பட குற்றம் சாட்டப்பட்ட நபர்களிடம் வழக்கு தொடர்பான ஆவணங்களை பகிர கீழமை நீதிமன்றங்கள் உத்தரவிடுகின்றன. வழக்கை விசாரணை நீதிமன்றம் விசாரிக்க தடை விதிக்க வேண்டும்’’ என கூறப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நேற்று ஒத்திவைத்தது.



Tags : INX Media ,P. Chidambaram , INX Media affair Adjournment of judgment in P. Chidambaram case
× RELATED பாஜக தேர்தல் அறிக்கையில் புதிய அறிவிப்புகள் இல்லை: ப.சிதம்பரம் பேட்டி