×

வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைதான நடிகை மீரா மிதுனின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு: சென்னை செஷன்ஸ் கோர்ட் உத்தரவு

சென்னை: வன்கொடுமை தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பரின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 9ம் தேதி வரை நீட்டித்து சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டது தொடர்பாக நடிகை மீரா மிதுனுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தன.

 இந்த புகார்களின் அடிப்படையில் வன்கொடுமை தடைச் சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் மீரா மிதுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.   இந்த வழக்கு தொடர்பாக கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் கடந்த 14ம் தேதி கைது செய்யப்பட்டனர். இதையடுத்து  மீரா மிதுன் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இருவரின் நீதிமன்ற காவல் முடிந்ததை அடுத்து, இருவரையும் நேற்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
இதையடுத்து, அவர்களின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 9ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் இருவருக்கும் ஏற்கனவே ஜாமீன் மறுக்கப்பட்டது  குறிப்பிட்டத்தக்கது.




Tags : Meera Mithun ,Chennai Sessions Court , Arrested under the Prevention of Torture Act Actress Meera Mithun Extension of court custody: Chennai Sessions Court order
× RELATED குற்ற வழக்குகளில்...